இடுகை இடப்பட்ட நாள்:
01 NOV 2026 12:35PM by PIB Chennai
சத்தீஸ்கர் மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு, அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (01.11.2026) வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் அதன் பழங்குடி கலாச்சாரம், இயற்கை வளம், தனித்துவமான நாட்டுப்புற மரபுகளுக்குப் பெயர் பெற்றது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். மாநிலத்தின் வளமான தொல்லியல் பாரம்பரியமும் அதன் அடையாளத்தின் ஒரு தனித்துவமான பகுதி என அவர் தெரிவித்துள்ளார். துடிப்பான நாட்டுப்புற கலாச்சாரத்தால் செழுமைப்படுத்தப்பட்ட சூழல், அனைவரையும் ஈர்க்கும் ஒரு அற்புதமான உணர்வை உள்ளடக்கியுள்ளது என்றும் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியுள்ளார்.
நக்சலிசத்தின் வேர்களை ஒழித்து, சத்தீஸ்கர் புது உத்வேகத்துடன் வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்வதைக் காண்பது மனதிற்கு இதமளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் திறமையான, கடின உழைப்பாளிகளின் பங்களிப்புடன், சத்தீஸ்கர் தேசத்தின் வளத்திற்கு தொடர்ந்து குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கும் என்றும் திரு நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331092®=3&lang=1
***
SK/PLM/PD