பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய கடற்படை கப்பல் திரிசூல், கிரீஸ் சென்றடைந்தது

இடுகை இடப்பட்ட நாள்: 01 NOV 2026 10:30AM by PIB Chennai

இந்திய கடற்படை கப்பலான திரிசூல், மத்திய தரைக்கடல் பகுதியில் மேற்கொண்டு வரும் தனது பயணத்தின் ஒரு பகுதியாக , 2026 அக்டோபர் 31 அன்று கிரீஸில் உள்ள சௌடா விரிகுடாவுக்குச் சென்றடைந்தது.

இந்த துறைமுகப் பயணத்தின் போது, ​​இந்தியக் கடற்படைக்கும் கிரீஸ் கடற்படைக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு பயிற்சி நடவடிக்கைகளில் கப்பல் பணியாளர்கள் பங்கேற்பார்கள். இவற்றில், கிரீஸ் கடற்படையினருடன் கலந்துரையாடல்கள், தொழில்முறை விவாதங்கள், கலாச்சாரப் பரிமாற்றங்கள் ஆகியவை இடம்பெறும்.

இந்திய குழுவினர் சௌடா விரிகுடாவில் உள்ள போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்கள். கப்பல் துறைமுகத்தில் உள்ள நாட்களில் பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும்.

இந்தப் பயணம், இந்தியக் கடற்படைக்கும் கிரேக்கக் கடற்படைக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதோடு, தொழில்முறைத் தொடர்புகளையும் மேம்படுத்தும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331076&reg=3&lang=1

***

SK/PLM/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2331125) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Malayalam