இடுகை இடப்பட்ட நாள்:
29 OCT 2026 5:33PM by PIB Chennai
இந்தியன் ரயில்வே ‘சிறப்பு இயக்கம் 6’ மூலம், நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டது. 2026 அக்டோபர் 2 முதல் 31-ம் தேதி வரை நடைபெற்ற இந்த சிறப்பு இயக்கம் மூலம், ரயில் நிலையங்களை சுத்தப்படுத்தியதுடன், மின்னணு கழிவுகள் மற்றும் பழைய பொருட்களை அகற்றுதல், ரயில் பயணிகளின் புகார்களுக்கு தீர்வு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், நாடு முழுவதும் 5,884 ரயில் நிலையங்களில், தூய்மை பணி தொடர்பாக பயணிகளிடம் கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் ரயில் நிலையத்தில், கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. ரயில்வே அதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், ரயில் பயணிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். ரயில் நிலையங்களில் சுகாதாரத்தை மேம்படுத்தி பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதே இந்நிகழ்வின் நோக்கம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330111®=3&lang=1&_gl=1
****
SK/LN/SH