புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
29 OCT 2026 12:54PM by PIB Chennai
மத்திய புதிய, புத்துப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ், தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் வகையில், பசுமை ஹைட்ரஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, 2026 அக்டோபர் மாதம் வரை 5.5 மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜனை கொள்முதல் செய்வதற்காக, சர்வதேச அளவில் 23 முன்னணி நிறுவனங்களுடன், இந்திய நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன.
தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ், குறைந்தபட்சம் ஆண்டுக்கு 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்டும் வகையில், 2029-30 நிதியாண்டிற்கு முதற்கட்டமாக ரூ.19,744 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, 5.5 மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜனை கொள்முதல் செய்வதற்காக, சர்வதேச அளவில் 23 முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இவற்றில் 70 சதவீதம் பசுமை ஹைடரஜன் ஏற்றுமதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். பசுமை ஹைட்ரஜன் திட்டங்களுக்காக சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்படும் எனவும், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329940®=3&lang=1
***
SS/LN/SH