சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்தியப்பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் சிறுத்தை உயிரிழந்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உயர்நிலைக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 28 OCT 2026 7:52AM by PIB Chennai

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்து 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று உயிரிழந்ததை மத்திய அரசு தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது. சிறுத்தைப்புலி திட்டத்தின் முக்கியத்துவத்தையும் அதன் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான உயர்தர பாதுகாப்பை உறுதி செய்வதையும் கருத்தில் கொண்டு இச்சம்பவம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள உயர்நிலைக்குழு ஒன்றை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

இக்குழுவில் தேசிய புலி பாதுகாப்பு ஆணையத்தின் வனத்துறை தலைமை இயக்குநர், வனவிலங்கு குற்றத் தடுப்பு அமைப்பின் கூடுதல் இயக்குநர், அதனுடைய மண்டல துணை இயக்குநர் இடம்பெற்றுள்ளனர்.

சிறுத்தையின் உயிரிழப்புக்கு காரணமான சூழலை ஆய்வுசெய்யவும் அனைத்து ஆதாரங்களை பரிசோதிக்கவும் இதுதொடர்பாக கடுமையான விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்தியப்பிரதேச வனத்துறையுடன் இணைந்து செயல்பட இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329277&reg=3&lang=1

***

SS/IR/LDN/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2329404) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu , Kannada