வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரிலிஃப் திட்டத்தின் இரண்டாவது கூறுக்கான காலக்கெடுவை 2027 மார்ச் 31 வரை வர்த்தகத் துறை நீட்டித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 26 OCT 2026 1:50PM by PIB Chennai

ஏற்றுமதி ஊக்குவிப்பு இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ரிலிஃப் திட்டத்தின் இரண்டாவது கூறுக்கான காலக்கெடுவை 2027 மார்ச் 31 வரை வர்த்தகத் துறை நீட்டித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் சார்ந்த தடைகள், வளைகுடா அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடல்சார் போக்குவரத்து அமைப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு 2026 செப்டம்பர் 30 அன்று தேதியிட்ட அறிவிப்பு எண் 37/2026-27-ன் மூலமாக இந்த நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் இரண்டாம் கூற்றின்படி, ஏற்றுமதியாளர்கள் குறிப்பிட்ட சில இடங்களுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகத்தின் காப்பீட்டைப் பெற ஊக்குவிக்கிறது. அதன்படி, 95 சதவீத இடர்பாடு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. 2026 மார்ச் 16 அன்று அல்லது அதற்கு பின்பு பெறப்படும் தனிப்பட்ட கொள்கைகள், முழு விற்றுமுதல் கொள்கைகள் ஆகியவற்றிற்கு இந்த சலுகை பொருந்தும். இதில் எரிசக்தி ஏற்றுமதிகள் தவிர முழு பெட்டக சுமை, பெட்டகத்தை விட குறைவான சுமை, குளிரூட்டப்பட்ட பெட்டகம் ஆகியவை அடங்கும்.

ரிலிஃப் திட்டத்தின் கீழ் காப்பீடு பெற விரும்பும் ஏற்றுமதியாளர்கள், www.ecgltd.in என்ற இணையதளத்தில் உள்ள இசிஜிசி வாடிக்கையாளர் இணையப்பக்கம் வழியாக தங்களுடைய கோரிக்கைகளையும் அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328402&reg=3&lang=1

***

SS/IR/SM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2328699) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Telugu , Malayalam