வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாரம்பரிய கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் விற்பனைக்கு வந்துள்ள கலைப்படைப்புகள்

இடுகை இடப்பட்ட நாள்: 26 OCT 2026 2:42PM by PIB Chennai

மத்திய வர்த்தக தொழில்துறை சார்பில் இயங்கும் அரசு மின்னணு வர்த்தகம் சார்பில், கலைப்படைப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டை சேர்ந்த பூம்புகார், கர்நாடகாவின் காவிரி உள்ளிட்ட 10 மாநிலங்களை சேர்ந்த நிறுவனங்களின் கலைப்பொருட்கள் இடம்பெற்றுள்ளன. பிரத்யேக டிஜிட்டல் அங்காடியான இதில், பாரம்பரிய கவினைப் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைத்தறி ஆடைகள், பாரம்பரிய கைவினைப் பொருட்கள், பாரம்பரிய சமையலறை பொருட்கள் ஆகியவற்றை வாங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.  அரசு விழாக்கள், மாநாடு, மாநில விழாக்கள், வெளிநாட்டு பிரதிநிதிகளை கவுரவிக்கும் நிகழ்வு, உள்ளிட்டவைகளுக்கு தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய உள்ளூர் கவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் வகையில், கைவினை பொருட்கள் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328424&reg=3&lang=1

****

TV/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2328690) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Telugu , Kannada