இடுகை இடப்பட்ட நாள்:
26 OCT 2026 8:05AM by PIB Chennai
மகரிஷி வால்மீகி ஜெயந்தியையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மகரிஷி வால்மீகியின் உயர்ந்த சிந்தனைகள், இந்திய கலாச்சாரம், பாரம்பரியத்தின் அடிப்படை அம்சங்களாக திகழ்கின்றன என்றும், அவை அனைத்து காலங்களிலும் நாட்டை மேம்படுத்தி, செழுமைப்படுத்தும் என்றும் பிரதமர் கூறினார். மனித சமூகத்திற்கான அவருடைய விலைமதிப்பற்ற சிந்தனைகள் நாட்டு மக்களுக்கு என்றும் வழிகாட்டும் ஒளியாகச் சேவையாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மகரிஷி வால்மீகியின் பெரும் கருணையைச் சுட்டிக்காட்டும் சமஸ்கிருத நீதிமொழியைப் பகிர்ந்துள்ள திரு மோடி, அந்த கருணை தான் முதலாவது நீதிமொழி உருவாகுவதற்கும், ராமாயணத்தின் அடித்தளத்திற்கும் அடிப்படையாக அமைந்தது என்றும் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328310®=3&lang=1
***
SS/IR/SM/GS