இடுகை இடப்பட்ட நாள்:
25 OCT 2026 4:34PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், 2026 அக்டோபர் 26, 27 தேதிகளில் ஆந்திரப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.
2026 அக்டோபர் 26 அன்று, விஜயவாடாவில் உள்ள டாக்டர் என்டிஆர் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் 40-வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களில் குடியரசுத் துணைத் தலைவர் தலைமை விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
தமது ஆந்திர மாநிலப் பயணத்தின் போது, குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலிலும், திருச்சானூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி அம்மாவாரி கோயிலிலும் பிரார்த்தனை செய்கிறார்.
****
(Release ID: 2328201)
AD/PLM/RJ