இடுகை இடப்பட்ட நாள்:
23 OCT 2026 7:45PM by PIB Chennai
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் ரிகர்வ் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ஹர்விந்தர் சிங், விஜய் சுண்டி ஆகியோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வீரர்களின் சிறப்பான செயல்பாடு நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளதாகக் குறிப்பிட்ட திரு மோடி, அவர்களது எதிர்கால முயற்சிகளுக்குத் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது:
"ஹர்விந்தர் சிங், விஜய் சுண்டி ஆகியோருக்கு இது ஒரு மகத்தான சாதனை!
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் ரிகர்வ் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இருவருக்கும் வாழ்த்துகள். இவர்களது சிறப்பான செயல்பாடு நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது. வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi"
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2327610®=3&lang=1
***
AD/RB/RJ