இடுகை இடப்பட்ட நாள்:
23 OCT 2026 10:14PM by PIB Chennai
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் எஸ்ஹெச்1 பிரிவில் புதிய உலக சாதனை, ஆசிய பாரா விளையாட்டு சாதனை ஆகியவற்றுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்ற மோனா அகர்வாலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பாரா துப்பாக்கிச் சுடும் வீராங்கனை என்ற பெருமையை அடைவது, இந்தச் சாதனையை மேலும் சிறப்பாக்குகிறது என்றும், அவர் தொடர்ந்து இந்தியாவிற்குப் பெருமை சேர்ப்பார் என நம்புவதாகவும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் மோனா அகர்வாலுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கம் கிடைத்துள்ளது!
மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் எஸ்ஹெச்1 பிரிவில் புதிய உலக சாதனை, ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சாதனை ஆகியவற்றைப் படைத்து வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். இந்தப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய பாரா துப்பாக்கிச் சுடும் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெறுவது, இந்தச் சாதனையை மேலும் சிறப்பாக்குகிறது. அவர் தொடர்ந்து இந்தியாவைப் பெருமைப்படுத்தட்டும்: பிரதமர் @narendramodi"
***
(Release ID: 2327727)
AD/PLM/RJ