இடுகை இடப்பட்ட நாள்:
13 OCT 2026 10:05PM by PIB Chennai
இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், நாட்டின் பொருளாதாரம், சந்தைகள், மக்களுடனான தொடர்பை வலுப்படுத்தவும் ப்ளூம்பெர்க் மேற்கொண்டுள்ளத் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மைக் ப்ளூம்பெர்க், நீண்ட காலம் தொடர்ந்துப் பணியாற்றிய இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்று பிரதமர் திரு நரேந்திர மோடியை குறிப்பிட்டார். இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சி, உலகளாவிய தலைமைத்துவ நிலையை அடைந்தது குறித்தும் அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் எதிர்காலம் குறித்த பிரதமரின் தொலைநோக்குப் பார்வை குறித்து கூறினார். இந்தியாவில் ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் 30 ஆண்டுகால பயணம் குறித்தும் அதனுடைய விரிவாக்கத் திட்டங்கள் தொடர்பாக விவாதித்தது மகிழ்ச்சியளித்ததாகவும் குறிப்பிட்டார்.
மைக் ப்ளூம்பெர்க்கின் சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் திரு மோடி, அவரை சந்தித்தது மகிழ்ச்சி என்றும் இந்தியாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக ப்ளூம்பெர்க் நிறுவனத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.
இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், நாட்டின் பொருளாதாரம், சந்தைகள், மக்களுடனான தொடர்பை வலுப்படுத்தவும் ப்ளூம்பெர்க் மேற்கொண்டுள்ள திட்டங்களை வரவேற்பதாகவும் திரு மோடி கூறினார். இந்தியாவின் வளர்ச்சிப்பணி பல்வேறு துறைகளிலும் ஏற்படுத்தி வரும் பெரும் வாய்ப்புகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"இன்று காலை உங்களைச் சந்தித்தது மகிழ்ச்சி
இந்தியாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக ப்ளூம்பெர்க் நிறுவனத்திற்கு வாழ்த்துகள்.
இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், நாட்டின் பொருளாதாரம், சந்தைகள், மக்களுடனான தொடர்பை வலுப்படுத்தவும் ப்ளூம்பெர்க் மேற்கொண்டுள்ள திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம்.
இந்தியாவின் வளர்ச்சிப்பணி பல்வேறு துறைகளிலும் பெரும் வாய்ப்புகளைத் தொடர்ந்து ஏற்படுத்துகிறது".
***
(Release ID: 2323020)
SS/IR/SM/SH