பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று, புதிய உலக சாதனை படைத்த ஹானிக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 23 OCT 2026 7:25PM by PIB Chennai

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் ஈட்டி எறிதல் எஃப்37/எஃப்38 பிரிவில் தங்கப் பதக்கம் வென்று, புதிய உலக சாதனையைப்  படைத்த ஹானியின் சிறப்பான செயல்பாட்டிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இந்த வெற்றி இந்திய பாரா தடகள விளையாட்டுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகவும், பெருமைக்குரிய தருணமாகவும் அமைந்துள்ளது என்று குறிப்பிட்ட திரு மோடி, ஹானி தொடர்ந்து புதிய உயரங்களை எட்டுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:

 

"தங்கப் பதக்கத்துடன் புதிய உலக சாதனை! ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில்,  ஆடவர் ஈட்டி எறிதல் எஃப்37/எஃப்38 பிரிவில் அபாரமான திறமையை வெளிப்படுத்திய ஹானிக்கு வாழ்த்துகள். இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை; இந்திய பாரா தடகள விளையாட்டுக்கு இது பெருமை சேர்க்கும் தருணம். அவர் தொடர்ந்து புதிய உயரங்களை எட்ட வாழ்த்துகிறேன்: பிரதமர் @narendramodi"

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2327589&reg=3&lang=1

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2327712) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Kannada