ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றத்தில் 202-வது வெற்றி விழாவும் ராணி சென்னம்மாவின் பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 23 OCT 2026 3:13PM by PIB Chennai

மத்திய ரயில்வே இணையமைச்சர் திரு வி சோமண்ணா தலைமையில், கித்தூர் ராணி சென்னம்மாவின் பிறந்தநாள், 202-வது வெற்றி விழா ஆகியவை இன்று (23.10.2026) புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பிரேரண ஸ்தலத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டன.

நிகழ்ச்சியில் மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், தில்லியில் இருந்தும் வந்த ஏராளமான கன்னடர்கள் ராணி சென்னம்மாவுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய இணையமைச்சர் திரு வி சோமண்ணா, கித்தூரின் ராணி சென்னம்மாவின் பிறந்தநாள், ஆங்கிலேயர்களுக்கு எதிரான அவரது 202-வது வெற்றிக் கொண்டாட்டம் ஆகயவற்றை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

கித்தூர் ராணி சென்னம்மா ஏகாதிபத்திய சக்தியை எதிர்த்துப் போராடி, எதிர்ப்பின் சின்னமாக வரலாற்றில் நிலைத்திருக்கிறார் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327334&reg=3&lang=1

***

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2327514) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Kannada , Malayalam