உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொல்கத்தாவில் மொழி அருங்காட்சியகத்தின் முதல் கட்டத்தைத் திறந்து வைத்தார், மத்திய அமைச்சர் திரு அமித் ஷா

இடுகை இடப்பட்ட நாள்: 19 JUL 2026 7:36PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, கொல்கத்தாவில் மொழிகள் குறித்த அருங்காட்சியகத்தின் (Museum of Word) முதல் கட்டத்தைத்  திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் திரு சுவேந்து அதிகாரி, நிதியமைச்சர் திரு ஸ்வபன் தாஸ்குப்தா, மத்திய உள்துறைச் செயலாளர், மத்திய கலாச்சாரத் துறைச் செயலாளர், உளவுத்துறை இயக்குநர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, நாட்டின் கலாச்சார மறுமலர்ச்சிக்காகப் பிரதமர் திரு நரேந்திர மோடி கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு, இந்த அருங்காட்சியகம் இன்று ஒரு உறுதியான வடிவத்தை அளித்து வருவதாகக் கூறினார். எந்தவொரு நாடு அல்லது பிராந்தியத்தின் கலாச்சார வெளிப்பாடும் மொழி இல்லாமல் சாத்தியமில்லை என்றும், மனித உணர்வுகள் மற்றும் வெளிப்பாடுகளிலிருந்து பிறக்கும் வார்த்தைகள் இல்லாமல் மொழி என்பதே இருக்க முடியாது என்றும் திரு ஷா கூறினார்.

மொழி என்பது சொற்களால் ஆனது என்றும், சொற்கள் உணர்வுகளிலிருந்து தோன்றுகின்றன என்றும், மொழியின் மூலமே கலாச்சாரம் வடிவமைக்கப்பட்டு வெளிப்படுகிறது என்றும் வருங்காலத் தலைமுறையினர் புரிந்துகொண்டால் மட்டுமே, நாட்டின் கலாச்சார மறுமலர்ச்சியை அடைய முடியும் என்று அவர் கூறினார். இந்தியாவின் மொழிகள், கலாச்சாரம் மற்றும் கலாச்சார மறுமலர்ச்சி ஆகியவற்றின் பயணத்தை வருங்காலத் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதில் இந்த  அருங்காட்சியகம் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாகத் திகழும் என்று திரு ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த அருங்காட்சியகம், இந்திய மொழிகள் மற்றும் கலாச்சாரம் குறித்து வருங்கால சந்ததியினருக்குக் கற்பிப்பதுடன், நாட்டின் செழுமையான கலாச்சாரப் பாரம்பரியத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, அந்தப் பாரம்பரியத்தில் வேரூன்றிய வாழ்க்கை முறையை நோக்கி அவர்களை வழிநடத்தும் என்று அமைச்சர் கூறினார். எதிர்காலத் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப இந்திய மொழிகள் வளர்ச்சியடையும் வகையில்,  அருங்காட்சியகத்தை டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக விரிவுபடுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286356&reg=3&lang=1

***

TV/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2327255) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , हिन्दी , Assamese , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Kannada