வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஸ்பெயின், பெல்ஜியம், பின்லாந்து மற்றும் எஸ்டோனியா நாடுகளுக்கான பயணத்தை நிறைவு செய்தார், மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

இடுகை இடப்பட்ட நாள்: 19 JUL 2026 7:51PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், உயர்மட்ட இந்திய வர்த்தகப் பிரதிநிதிக் குழுவினருடன் இணைந்து, 2026 ஜூலை 13 முதல் 18 வரை ஸ்பெயின், பெல்ஜியம், பின்லாந்து மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட ஐந்து நாள் பயணத்தை நிறைவு செய்தார். இந்தப் பயணத்தின்போது, நான்கு நாடுகளின் அமைச்சர்கள், மூத்த அரசுத் தலைவர்கள், வணிக நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் தொழில் துறை சார்ந்த முக்கியப் பிரதிநிதிகளுடன் பல்வேறு உயர்மட்டக் கலந்துரையாடல்களை மேற்கொண்டார். இந்திய-ஐரோப்பிய ஒன்றியம் தடையில்லா வர்த்தக ஒப்பந்த (எஃப்டிஏ) பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததன் மூலம் உருவான சாதகமான சூழலைப் பயன்படுத்தி, ஐரோப்பாவுடனான இந்தியாவின் பொருளாதாரக் கூட்டாண்மையை ஆழப்படுத்துவது, முதலீட்டுத் தொடர்புகளை விரிவுபடுத்துவது, தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் வணிகங்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவது ஆகியவை இந்தப் பயணத்தின் நோக்கங்களாக இருந்தன.

அமைச்சர் தனது எஸ்டோனியப் பயணத்தை  ஜூலை 18 அன்று நிறைவு செய்தார். 2021-ல் டாலினில் இந்தியாவின் நிரந்தரத் தூதரகம் திறக்கப்பட்ட பின், இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்படும் முதல் அமைச்சர்கள் மட்டத்திலான பயணம் இதுவாகும். மேலும், இருதரப்புப் பொருளாதார உறவுகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் திரு மார்கஸ் சாக்னாவுடனான கலந்துரையாடல்களின் போது, டிஜிட்டல் ஆளுகை, நிதிநுட்பம், யுபிஐ ஒருங்கிணைப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பினரும் ஆராய்ந்தனர். இந்திய-ஐரோப்பிய ஒன்றிய எஃப்டிஏ-ஐ விரைவாகச் செயல்படுத்துவதற்கு எஸ்டோனியா தனது வலுவான ஆதரவைத் தெரிவித்ததுடன், எஸ்டோனியா டிஜிட்டல் உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியாவிற்கு அழைப்பு விடுத்தது.

இந்திய-எஸ்டோனிய வர்த்தக மன்றத்தில் உரையாற்றிய திரு கோயல், இணையப் பாதுகாப்பு, பிளாக்செயின், தூய்மையான எரிசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் ஆகிய துறைகளில் இரு நாட்டு வணிக நிறுவனங்களும் தங்கள் ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286360&reg=3&lang=1

***

SS/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2327242) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu , Malayalam