மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

12-வது பிரிக்ஸ் நாடாளுமன்ற மாநாடு அக்டோபர் 26, 27 ஆகிய தேதிகளில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 22 OCT 2026 4:03PM by PIB Chennai

இந்திய நாடாளுமன்றம் 12-வது பிரிக்ஸ் நாடாளுமன்ற மாநாட்டை 2026 அக்டோபர் 26, 27 ஆகிய தேதிகளில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடத்த உள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, இம்மாநாடு இந்தியாவின் நாடாளுமன்ற வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.

இதில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்றத் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மாநிலங்களவைத் துணைத்தலைவர் திரு ஹரிவன்ஷ், மாநில சட்டப்பேரவைத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இதர முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

பிரதமர் திரு நரேந்திர மோடி இந்நிகழ்வில் பங்கேற்று வருகைதர உள்ள பிரதிநிதிக் குழுக்களின் தலைவர்களை சந்திப்பார் என்று மக்களவைத் தலைவர் கூறினார்.   

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2326629&reg=3&lang=1

***

SS/IR/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2326915) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Kannada , Gujarati , Assamese , Urdu , हिन्दी , Bengali , Malayalam