பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாக்கியஸ்ரீ ஜாதவுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 21 OCT 2026 6:55PM by PIB Chennai

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் எஃப்34 குண்டு எறிதல் பிரிவில் சிறப்பான எறிதல், தனிப்பட்ட சிறந்த சாதனை ஆகியவை மூலம் வெள்ளிப் பதக்கத்தை வென்று மீண்டும் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த பாக்கியஸ்ரீ ஜாதவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21.10.2026) வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

 

முந்தைய போட்டியிலிருந்து தமது செயல்திறனை மேம்படுத்தியுள்ள அவர், குறிப்பிடத்தக்க நிலைத்தன்மையையும், மேலும் சிறப்பாகச் செயல்படுவதற்கான உறுதியையும் வெளிப்படுத்தியுள்ளார் என்பதைக் குறிப்பிட்டுள்ள திரு நரேந்திர மோடி, இந்த வெற்றிக்காக பாக்கியஸ்ரீக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளதோடு, அவரது விடாமுயற்சி உண்மையிலேயே ஊக்கமளிப்பதாகவும் கூறியுள்ளார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :

 

"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் மேலும் ஒரு வெள்ளிப் பதக்கமும், புதிய தனிப்பட்ட சிறந்த சாதனையும்!

 

பெண்களுக்கான எஃப்34 குண்டு எறிதல் பிரிவில், தமது சிறப்பான எறிதலின் மூலம் வெள்ளிப் பதக்கத்தை வென்று, பாக்கியஸ்ரீ ஜாதவ் மீண்டும் ஒருமுறை இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார். கடந்த போட்டியிலிருந்து தமது செயல்திறனை மேம்படுத்தியுள்ள அவர், குறிப்பிடத்தக்க நிலைத்தன்மையையும், மேலும் சிறப்பாகச் செயல்படுவதற்கான உறுதியையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த வெற்றிக்கு பாக்கியஸ்ரீக்கு வாழ்த்துகள். அவரது விடாமுயற்சி உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி"

 

(Release ID : 2326111)

***

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2326826) வருகையாளர் எண்ணிக்கை : 11