பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ரவி ரோங்காலிக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
21 OCT 2026 7:20PM by PIB Chennai
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் குண்டு எறிதல் எஃப்40 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ரவி ரோங்காலிக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது மற்றொரு சிறப்பான சாதனை என்று குறிப்பிட்ட திரு மோடி, சர்வதேச அரங்கில் அவர் தொடர்ந்து பெற்று வரும் வெற்றிகள், விளையாட்டின் மீதான அவரது அர்ப்பணிப்பையும் ஈடுபாட்டையும் பிரதிபலிக்கின்றன என்று தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:
"ரவி ரோங்காலிக்கு மற்றுமொரு சிறப்பான சாதனை! 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் குண்டு எறிதல் எஃப்40 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். சர்வதேச அரங்கில் அவர் தொடர்ந்து பெற்று வரும் வெற்றிகள், விளையாட்டின் மீதான அவரது அர்ப்பணிப்பையும் ஈடுபாட்டையும் பிரதிபலிக்கின்றன: பிரதமர் @narendramodi"
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326126®=3&lang=1
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2326291)
வருகையாளர் எண்ணிக்கை : 8