பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற சச்சின் கிலாரிக்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 21 OCT 2026 6:44PM by PIB Chennai

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் எஃப்46 குண்டு எறிதல் பிரிவில், மீண்டும் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக் கொண்ட சச்சின் கிலாரிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21.10.2026) வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

 

ஒரு பட்டத்தை வெற்றிகரமாகத் தக்கவைத்துக்கொள்வது அசாதாரணமானது என்றும், அவரது நிலைத்தன்மை, உறுதிப்பாடு, தொடர்ச்சியான விளையாட்டுத் திறமை ஆகியவை உண்மையிலேயே ஊக்கமளிப்பவை என்றும் குறிப்பிட்டுள்ள திரு நரேந்திர மோடி, இந்த விளையாட்டுப் பயணத்தில் மற்றொரு சிறந்த அத்தியாயத்தை முன்னிட்டு அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :

 

"ஒரு முன்மாதிரியான வெற்றி!

 

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் குண்டு எறிதல் எஃப்46 பிரிவில், சச்சின் கிலாரி, மிகச்சிறந்த எறிதலின் மூலம் தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக்கொண்டு மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். ஒரு பட்டத்தை வெற்றிகரமாகத் தக்கவைத்துக்கொண்டு, பதக்கத்தை மீண்டும் கைப்பற்ற வழிவகுப்பது அசாதாரணமானது. அவரது நிலைத்தன்மை, உறுதிப்பாடு, தொடர்ச்சியான விளையாட்டுத் திறமை ஆகியவை உண்மையிலேயே ஊக்கமளிக்கின்றன. சச்சினின் விளையாட்டுப் பயணத்தில் மற்றொரு புகழ்பெற்ற அத்தியாயத்தை எட்டியதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திர மோடி"

 

(Release ID : 2326102)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2326259) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: Marathi , English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Kannada , Malayalam