பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பிரணவ் சூர்மாவுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 20 OCT 2026 9:25PM by PIB Chennai

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2026 ஆடவர் வட்டு எறிதல் எஃப்51/52/53 பிரிவில் முந்தைய சாதனையை முறியடித்து தங்கப் பதக்கம் வென்ற பிரணவ் சூர்மாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவர் புதிய ஆசிய சாதனைப் படைத்திருப்பது இந்த மதிப்புடைய பதக்கத்தையும், வெற்றியையும் மேலும் சிறப்பானதாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள திரு மோடி, பிரணவின் வலிமை, உறுதிப்பாடு, போட்டி உணர்வு ஆகியவை ஊக்கமளிக்கிறது என்றும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காக அவருக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது:

"ஒரு சிறப்புமிக்க பதக்கம் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டி சாதனை!

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2026 ஆடவர் வட்டு எறிதல் எஃப்51/52/53 பிரிவில் முந்தைய சாதனையை முறியடித்து பிரணவ் சூர்மா சிறப்பானச் செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளார். அவர் புதிய ஆசிய சாதனைப் படைத்திருப்பது இந்த மதிப்புடைய பதக்கத்தையும், வெற்றியையும் மேலும் சிறப்பானதாக்கியுள்ளது. பிரணவின் வலிமை, உறுதிப்பாடு, போட்டி உணர்வு ஆகியவை ஊக்கமளிக்கிறது.  இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனைக்காக அவருக்கு வாழ்த்துகள்".

***

(Release ID: 2325602)

SS/IR/SU/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2326130) வருகையாளர் எண்ணிக்கை : 7