பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜாம்பியா நாட்டின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஹகைண்டே ஹிச்சிலேமாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 AUG 2026 9:50PM by PIB Chennai

ஜாம்பியா அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஹகைண்டே ஹிச்சிலேமாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஜாம்பியா  இடையேயான பன்முகத் தன்மைக் கொண்ட ஒத்துழைப்பை பெரிதும் மதிப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஜாம்பியா அதிபர் திரு ஹகைண்டே ஹிச்சிலேமாவின் தலைமையின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

“ஜாம்பியா அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஹகைண்டே ஹிச்சிலேமாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அந்நாட்டுடனான பன்முகத் தன்மைக் கொண்ட ஒத்துழைப்பின் மீது  இந்தியா பெரும் மதிப்பு கொண்டுள்ளது. அவரது தலைமையின் கீழ் இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்த இணைந்து பணியாற்ற ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.”

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2301781&reg=3&lang=1

***

SS/SV/GS/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2325990) வருகையாளர் எண்ணிக்கை : 7