பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பாவினா படேலுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 OCT 2026 6:31PM by PIB Chennai

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில்,  மகளிர்  டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் (4-5 பிரிவில்) வெண்கலப் பதக்கம் வென்ற பாவினா படேலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (20.10.2026) வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

இது அந்த வீராங்கனைக்கு கிடைத்த மற்றுமொரு பதக்கம் எனவும் மற்றுமொரு மைல்கல் என்றும் குறிப்பிட்டுள்ள திரு நரேந்திர மோடி, பல ஆண்டுகளாக அவர் காட்டிவரும் நிலைத்தன்மையும், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவதற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் உண்மையிலேயே போற்றத்தக்கவை என்று கூறியுள்ளார். மேலும், அவரது எதிர்கால முயற்சிகளுக்குத் தமது நல்வாழ்த்துகளையும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"மற்றொரு பதக்கம், மற்றுமொரு மைல்கல்!

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் ஒற்றையர் பிரிவு 4-5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பவினா படேலுக்கு (@BhavinaOfficial) வாழ்த்துகள். பல ஆண்டுகளாக அவர் காட்டிவரும் நிலைத்தன்மையும், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவதற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் உண்மையிலேயே போற்றத்தக்கவை. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திர மோடி (@narendramodi)".

****

(Release ID: 2325494)

AD/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2325502) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Malayalam