சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
சுக்னா, சவுஜ் ஜீல் சேர்க்கை: இந்தியாவில் ராம்சார் இடங்களின் எண்ணிக்கை 103 ஆக உயர்வு!
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2026 8:41PM by PIB Chennai
சண்டிகரில் உள்ள சுக்னா ஈரநிலம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள சவுஜ் ஜீல் ஆகிய இரு பகுதிகள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் இடங்களாகப் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் இந்தியாவின் மொத்த ராம்சார் இடங்களின் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்துச் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு ஈரநிலப் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகக் குறிப்பிட்டார். பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கவும், நீர் மற்றும் பருவநிலை பாதுகாப்பை உறுதி செய்யவும், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை பெரிதும் உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.
இயற்கை எழில் கொஞ்சும் சுக்னா மற்றும் சவுஜ் ஜீல் ஆகிய இடங்களுக்கு வருகை தருமாறு சுற்றுலாப் பயணிகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324120®=3&lang=1
***
TV/VK/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324953)
வருகையாளர் எண்ணிக்கை : 7