பாதுகாப்பு அமைச்சகம்
அவசர மருத்துவ உதவி - லே-யில் இளைஞருக்கு விமானப்படை உதவி
இடுகை இடப்பட்ட நாள்:
18 OCT 2026 6:18PM by PIB Chennai
இந்திய விமானப்படையின் சி-130ஜெ ரக விமானம் ஒன்று, நள்ளிரவில் திடீரென அவசர மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 30 வயது நோயாளி ஒருவரை மேல் சிகிச்சைக்காக லேயிலிருந்து பாலம் பகுதிக்கு கொண்டு சென்றது.
இருளிலும் சவாலான வானிலைச் சூழல்களிலும் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. உயர் மட்ட செயல்பாட்டுத் தயார்நிலை, தொழில்முறை ஒருங்கிணைப்பு ஆகியவற்றால் இந்தப் பணி வெற்றி கரமாக மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த நோயாளி மேல் சிகிச்சைக்காக எய்ம்ஸ்-க்கு மாற்றப்பட்டார்.
இந்த நடவடிக்கை, இந்திய விமானப்படையின் செயல்பாட்டுத் தயார்நிலையையும், சவாலான சூழ்நிலைகளில் மருத்துவ உதவி உட்பட, முக்கியமான மனிதாபிமான உதவிகளை உடனடியாக வழங்கும் அதன் திறனையும் பிரதிபலிக்கிறது.
****
(Release ID: 2324922)
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324947)
வருகையாளர் எண்ணிக்கை : 9