உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாபில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன : மத்திய அமைச்சர் திரு அமித் ஷா

இடுகை இடப்பட்ட நாள்: 16 OCT 2026 5:07PM by PIB Chennai

போதைப்பொருள் புழக்கம், திட்டமிட்ட குற்றங்கள் ஆகியவை பஞ்சாப் மாநிலத்தில் அதிகரித்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, வெளியிட்ட ஒரு பதிவில் கூறியிருப்பதாவது:

 

"பஞ்சாப் மாநிலம் இப்போது குற்றங்களின் அச்சுறுத்தல்களுடன் போராடி வருகிறது என்று கூறியுள்ளார். பஞ்சாப் மக்களின் பாதுகாப்பிற்கான பொறுப்பை யார் ஏற்பார்கள் என்பதே பஞ்சாப் மாநில அரசுக்கு முன்னால் உள்ள மிகப்பெரிய கேள்வியாகும். திர்பாவில் ஒருவர் விஷம் அருந்தியதும், மான்சாவில், போதைப்பொருளுக்கு எதிராகக் குரல் எழுப்பிய பர்விந்தர் சிங் ஜோட்டா பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டதும், பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளன. பர்விந்தரின் தந்தை, பஞ்சாப் அரசு மீதும், அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் பஞ்சாப் அரசிடம் இருந்து உள்துறை அமைச்சகம் பதில்களைக் கோரும். பஞ்சாபில், போதைப்பொருள் வர்த்தகம் செழித்து வருகிறது. திட்டமிடப்பட்ட குற்றங்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. போதைப்பொருளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகள் எழுகின்றன. முதலமைச்சர் அவர்களே, பஞ்சாப் மக்கள் விளம்பரத்தை விரும்பவில்லை. அவர்கள் பதில்களை விரும்புகிறார்கள். போதைப்பொருள் கட்டமைப்புகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கையையும், குற்றவாளிகளுக்கு எதிராக பாரபட்சமற்ற விசாரணையையும் மக்கள் விரும்புகிறார்கள். எங்கள் நோக்கம் தெளிவானது. போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கை, நமது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்தல், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தல், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுதல் ஆகியவை ஆகும்."

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324400&reg=3&lang=1

 

(Release ID : 2324400)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2324589) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati