பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காமன்வெல்த் விளையாட்டு 2026 மகளிர் ஜூடோ 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்ற அஸ்மிதா டே-க்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 31 JUL 2026 11:44PM by PIB Chennai

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு 2026 மகளிர் ஜூடோ 48 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற அஸ்மிதா டே-க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அஸ்மிதா டே-வின் செயல்பாடு என்றும் நினைவு கூறப்படும் என்றும், இதன்மூலம் ஜூடோ விளையாட்டு மேலும் பிரபலம் அடையும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். 

அவருடைய எதிர்கால முயற்சிகளுக்கு திரு மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது;

“உண்மையில் பொன்னான செயல்பாடு! மகளிர் ஜூடோ 48 கிலோ எடைப்பிரிவின் இறுதிச்சுற்றில் அஸ்மிதா டே தங்கப்பதக்கம் வென்றது பெருமிதம் அளிக்கிறது.  இந்தச் செயல்பாடு என்றும் நினைவுக் கூறப்படும். இதன்மூலம் ஜூடோ விளையாட்டு மேலும் பிரபலம் அடையும், அவருடைய எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்”

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292822&reg=48&lang=2

(Release ID: 2292822)

***

TV/IR/SU/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2324505) வருகையாளர் எண்ணிக்கை : 18