வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

இடுகை இடப்பட்ட நாள்: 15 OCT 2026 3:06PM by PIB Chennai

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு இளைஞர்கள் தங்களது திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்கச் செய்வதில் பங்காற்ற வேண்டும் என்றும் மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல்  கேட்டுக் கொண்டுள்ளார்.

"வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான பாதைகள்" என்ற தலைப்பில் நடைபெற்ற எஸ்.ஆர்.சி.சி நூற்றாண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், உற்பத்தித் துறை, தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக் கொள்ளுதல், திறன் மேம்பாடு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும்  முதலீடுகள், இந்திய இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன், உலக அளவிலான பொருளாதாரத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தும் என்று தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் நடைமுறைப் பயன்பாடுகள் ஆகியவற்றில் திறன்களை வளர்த்துக்கொண்டு, மாறிவரும் வேலைவாய்ப்புச் சூழலுக்குத் தயாராக வேண்டும் என்று இளைஞர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

1990, 2000-மாவது ஆண்டுகளில், தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அடைந்த வளர்ச்சியைச் சுட்டிக்காட்டிய திரு பியூஷ் கோயல், இளைஞர்கள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும், நடைமுறைப்படுத்துவதிலும் முன்னணியில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323810&reg=3&lang=1         

***

SK/SV/RJ 


(வெளியீட்டு அடையாள எண்: 2324396) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada