சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
பல்லுயிர் பாதுகாப்பை ஆதரிக்க, அணுகல், பயன் பகிர்வு நிதியாக ரூ.2.02 கோடியை தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் விடுவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
10 OCT 2026 7:18PM by PIB Chennai
பல்லுயிர் பாதுகாப்பு, உயிரியல் வளங்களின் நீடித்த பயன்பாடு, உள்ளூர் சமூகங்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றை ஆதரிப்பதற்காக, தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் (என்பிஏ), உயிரியல் வளங்களைப் பயன்படுத்துவதற்காக விதைத்துறை நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட அணுகல் மற்றும் பயன் பகிர்வு (ஏபிஎஸ்) பங்களிப்புகளில், 27 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களுக்கு அவற்றின் பங்கிற்குரிய தொகையாக ரூ. 2.02 கோடியை வழங்கியுள்ளது.
இந்த வெளியீட்டின் மூலம், உயிரியல் வளங்களைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்களை நியாயமான முறையில் பகிர்ந்தளிப்பதிலும், அத்தகைய பலன்களை, பாதுகாப்பிற்கும் சமூக நலனுக்கும் மீண்டும் முதலீடு செய்வதிலும் இந்தியா கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், என்பிஏ வழங்கிய மொத்த நிதியுதவியான ரூ.202.00 கோடி எட்டப்பட்டுள்ளது. மாநில பல்லுயிர் வாரியங்கள் மற்றும் யூனியன் பிரதேச பல்லுயிர் மன்றங்களுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகள், பல்லுயிர் மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்துதல், பல்லுயிர் பதிவேடுகளைப் புதுப்பித்தல், பாரம்பரிய பயிர் வகைகள் மற்றும் மருத்துவத் தாவரங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட முன்முயற்சிகளுக்கு ஆதரவளிக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2321791®=3&lang=1
***
SS/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324351)
வருகையாளர் எண்ணிக்கை : 11