பாதுகாப்பு அமைச்சகம்
ஷ்ரேயஸ் என்ற அதிநவீன கடலோர ரோந்து கப்பல் அறிமுகம்
இடுகை இடப்பட்ட நாள்:
10 OCT 2026 7:20PM by PIB Chennai
கொல்கத்தாவில் உள்ள ஜிஆர்எஸ்இ நிறுவனத்தில் ஷ்ரேயஸ் (யார்ட் 3040) என்ற அதிநவீன கடலோர ரோந்து கப்பல், 2026 அக்டோபர் 10 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. கடற்படைத் துணைத் தலைமைத் தளபதி வைஸ் அட்மிரல் அஜய் கோச்சார் முன்னிலையில், திருமதி ரேமன் கோச்சார் கப்பலை அறிமுகப்படுத்தினார். இந்தியக் கடற்படை, பாதுகாப்பு அமைச்சகம், ஜிஆர்எஸ்இ நிறுவனம் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட அடுத்தத் தலைமுறை கடலோர ரோந்து கப்பல்கள், கடல்சார் கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், கடல்சார் சொத்துகளின் பாதுகாப்பு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம், கடல் கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்கு, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ரோந்துக் கப்பல்களின் திறனை வலுப்படுத்தும். இக்கப்பல்களின் அறிமுகம், உள்நாட்டிலேயே கப்பல் கட்டும் முயற்சியில் இந்தியக் கடற்படை எட்டியுள்ள மற்றொரு முக்கிய மைல்கல்லாகும். மேலும் இது மத்திய அரசின் தற்சார்பு இந்தியா, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ ஆகிய முன்முயற்சிகளுடன் இணக்கமானதாக அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2321795®=3&lang=1
***
SS/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324345)
வருகையாளர் எண்ணிக்கை : 7