விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எதிர்கால உற்பத்தித்திறன் குறித்து மதிப்பீடு செய்ய உதவிடும் வகையில் மகசூல் சார்ந்த தரவுகள் தொகுக்கப்படுகின்றன: வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை செயலாளர் எம் எல் ஜாட்

இடுகை இடப்பட்ட நாள்: 13 OCT 2026 3:12PM by PIB Chennai

எதிர்கால உற்பத்தித்திறன் குறித்து மதிப்பீடு செய்ய உதவிடும் வகையில் மகசூல் சார்ந்த தரவுகள் தொகுக்கப்படுவதாக வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை செயலாளர் டாக்டர் எம்.எல்.ஜாட் தெரிவித்துள்ளார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இந்தூரில் இயங்கி வரும் தேசிய சோயாபீன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம், 2026 அக்டோபர் 9 அன்று நடத்திய சோயாபீன்ஸ் அறுவடை தின நிகழ்ச்சியில் பேசிய அவர், சீரற்ற வானிலை நிலவிய போதிலும், மேம்படுத்தப்பட்ட சோயாபீன்ஸ் ரகங்களான என்ஆர்சி 268, என்ஆர்சி 270 ஆகியவை, ஹெக்டேர் ஓன்றிற்கு 20 குவிண்டால் வரை மகசூல் தரும் என்ற நம்பிக்கைக்குரிய அறிகுறிகளை அவை வெளிப்படுத்தியுள்ளதை சுட்டிக் காட்டினார்.

மேலும், இந்தத் தரவுகளின் அறிவியல் பகுப்பாய்வு, சோயாபீன் உற்பத்தித்திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட எதிர்கால ஆராய்ச்சிகளுக்கு உதவும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322744&reg=3&lang=1   

***

SK/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2324064) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Punjabi , Telugu