குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ஆயுர்வேதம் குறித்து கூடுதல் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் – குடியரசு துணைத்தலைவர்
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2026 2:01PM by PIB Chennai
ஆயுர்வேதம் குறித்து கூடுதல் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுமாறு குடியரசு துணைத்தலைவர் திரு சி பி. ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். பாரம்பரிய மருத்துவமுறைகளின் செயல்திறனை உறுதிப்படுத்தவும், நோயாளிகளின் நம்பிக்கையை வலுப்படுத்தவும், இந்தியாவில் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு உலகளாவிய அங்கீகாரத்தை அதிகரிக்கவும் இதுபோன்ற ஆராய்ச்சிகள் அவசியம் என்று அவர் தெரிவித்தார். புதுதில்லியில் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த குழந்தைகள் நலன் குறித்த சர்வதேச மாநாட்டின் மூன்றாவது பதிப்பின் தொடக்க நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தை எய்ம்ஸ் நிறுவனத்திற்கு இணையான தரத்திற்கு மேம்படுத்த வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக் குறித்து சுட்டிக்காட்டிய குடியரசு துணைத்தலைவர், இந்நிறுவனம் அந்த இலக்கை நோக்கி முன்னேறுவதாக கூறினார். அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் 10-வது நிறுவன நாளையொட்டி வாழ்த்துகளைத் தெரிவித்த குடியரசு துணைத்தலைவர், அந்நிறுவனத்தின் தரத்தை மேலும் வலுப்படுத்த ஆராய்ச்சி, புதுமைக் கண்டுபிடிப்பு, கல்விசார்ந்த சிறப்பு அம்சங்களில் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள் நாட்டின் நாகரீக மரபு, பல நூற்றாண்டுகள் பழமையான அறிவுசார் மரபுகளில் வேரூன்றிய மதிப்பு வாய்ந்த பாரம்பரியம் என்று குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323761®=3&lang=1
***
SS/IR/SM/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2323888)
வருகையாளர் எண்ணிக்கை : 14