பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுகளில் 2026-ல் பங்கேற்ற இந்திய குழுவினருடன் பிரதமர் அக்டோபர் 15 அன்று உரையாடுகிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
14 OCT 2026 3:13PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆசிய விளையாட்டுகள் 2026-ல் பங்கேற்ற இந்திய குழுவினருடன் புதுதில்லி மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் 2026 அக்டோபர் 15 அன்று மாலை மணி 4.30 அளவில் உரையாட உள்ளார். அத்துடன், இந்நிகழ்ச்சியில் கூடியிருப்பவர்களிடையேயும் அவர் உரையாற்ற உள்ளார்.
ஜப்பானின் அய்ச்சி – நகோயாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் உட்பட 85 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் நான்காம் இடத்தைப் பிடித்தது. இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியின் பதக்கப்பட்டியலில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக முதன்மையான ஐந்து நாடுகள் என்ற வரிசையில் இடம்பெற்றது. இது விளையாட்டுகளின் பல்வேறு பிரிவுகளில் நாட்டின் வளர்ந்து வரும் போட்டித்தன்மையைப் பிரதிபலிக்கிறது.
இப்போட்டிகளில் வில்வித்தையில் வரலாற்று சிறப்புமிக்க செயல்பாடு, ஹாக்கிப் போட்டியில் ஆடவர், மகளிர் பிரிவினர் தங்கப் பதக்கம் வென்றது, சாஃப்ட் டென்னிஸ், தற்காப்புக்கலை பிரிவில் முதன்முறையாக பதக்கம் வென்றது உட்பட இந்தியா பல்வேறு சாதனைகளைப் பதிவு செய்தது.
இந்நிகழ்ச்சியில் இந்திய விளையாட்டுக் குழுவினர், அவர்களுடைய பயிற்சியாளர்கள், உதவிப் பணியாளர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க அதிகாரிகள், தேசிய விளையாட்டு கூட்டமைப்பு பிரதிநிதிகள், மத்திய இளையோர் நலன், விளையாட்டு அமைச்சக அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323214®=3&lang=1
***
(Release ID: 2323214)
TV/IR/SM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2323455)
வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
Bengali-TR
,
Kannada
,
Malayalam
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Punjabi
,
Gujarati
,
Telugu