மத்திய அமைச்சரவை
தேசிய சமூக உதவித் திட்டம்: அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
14 OCT 2026 4:06PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு, ஊரக மேம்பாட்டுத் துறையின் முன்மொழிவை ஏற்று, 2026-27 முதல் 2030-31 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ 53,428 கோடி மதிப்பீட்டில் தேசிய சமூக உதவித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பின்வரும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன:
இத்திட்டம் மற்றும் அதன் துணைத் திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் செய்தல்,
மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் தகுதி வரம்புகள், பயனாளிகளின் வரம்பு. உதவித் தொகை விகிதங்களை மாற்றி அமைத்தல்,
முதியோர், விதவைகளுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் குடும்ப நலத் திட்டத்தை தற்போதுள்ள நிலையிலேயே தொடர்ந்து செயல்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 0 முதல் 79 வயது வரையிலானவர்களுக்கு, ரூ 375-ம், 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு ரூ 625-ம் உதவித் தொகையாக வழங்கப்படும். உதவித் தொகை விகிதத்தை அதிகரிப்பதுடன், பல்வேறு மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ், குறிப்பிடத்தக்க இயலாமை என்பதற்கான தகுதி வரம்பு, தற்போதுள்ள 80 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக் குறைக்கப்படும்.
இயலாமைக்கான ஓய்வூதியத்தைப் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு பூஜ்யம் (அதாவது பிறந்தது முதல்) என்று நிர்ணயிக்கப்படும்.
முதியோர், விதவைகளுக்கான ஓய்வூதியத் திட்டங்கள், குடும்ப நலத் திட்டம் ஆகியவை தற்போதுள்ள நிலையிலேயே தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மொத்தம் 3.20 கோடி பயனாளிகள் பயனடைவர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், தகுதி வரம்புகள், பயனாளிகளின் எண்ணிக்கை, உதவித் தொகை விகிதங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த வழிகாட்டுதல்கள் மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்பட்டு செயல்படுத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323264®=3&lang=1
***
TV/SV/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2323347)
வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada