பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆஸ்திரிய அதிபர் டாக்டர் கிறிஸ்டியன் ஸ்டாக்கரின் இந்தியப் பயணத்தின் பலன்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 16 APR 2026 3:01PM by PIB Chennai

எண்

புரிந்துணர்வு ஒப்பந்தம்/ உடன்படிக்கை

விவரம்

1

இந்தியா மற்றும் ஆஸ்திரியா இடையேயான ஒலி-ஒளி கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தம்

இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் திரைப்படத் துறைகளுக்கு இடையே மேம்பட்ட ஒத்துழைப்பிற்கான ஒரு கட்டமைப்பை வழங்குவதுடன், கூட்டுத் திரைப்படத் தயாரிப்பு, படைப்புப் பரிமாற்றங்கள் மற்றும் பரந்த கலாச்சார ஈடுபாட்டிற்கும் வழிவகுக்கும்.

2

இந்திய மற்றும் ஆஸ்திரிய நிறுவனங்களுக்கான விரைவு வழிமுறை அமைப்பது குறித்த கூட்டறிக்கை

விரைவு வழிமுறை, இந்திய மற்றும் ஆஸ்திரிய நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் ஒருவருக்கொருவரின் பொருளாதாரங்களில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் கண்டறிந்து தீர்க்கும். மேலும், வணிகம் செய்வதை எளிதாக்குவது தொடர்பாக முதலீட்டாளர்களின் கண்ணோட்டத்தில் இருந்து வழங்கப்படும் பொதுவான ஆலோசனைகளைப் பற்றி விவாதிப்பதற்கான ஒரு தளமாகவும் இந்த விரைவு வழிமுறை செயல்படும்.

3

ராணுவ விவகாரங்களில் ஒத்துழைப்புக்கான உடன்படிக்கை

2026 ஜனவரி 27 அன்று கையெழுத்திடப்பட்ட இந்திய-ஐரோப்பிய ஒன்றிய ராணுவ மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மையின் உத்வேகத்தை அடிப்படையாகக் கொண்டு, ராணுவ விவகாரங்கள், பாதுகாப்பு, தொழில் மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மை ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு நிறுவனக் கட்டமைப்பை இந்த உடன்படிக்கை  வழங்கும். அத்துடன், இது பாதுகாப்பு குறித்த கொள்கை உரையாடல், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றையும் எளிதாக்கும்.

4

பயங்கரவாத எதிர்ப்பு கூட்டுப் பணிக்குழு குறித்த உடன்படிக்கை

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பான விஷயங்களில் உத்திசார் ஒத்துழைப்புக்கான பகுதிகளை ஆராய்வதற்காக, பயங்கரவாத எதிர்ப்புக்கான ஒரு கூட்டுப் பணிக்குழுவை நிறுவுவதில் இரு தரப்பினரும் இணைந்து செயல்படுவது என்ற இலக்கு உட்பட, இந்தியா மற்றும் ஆஸ்திரியா இடையேயான பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை இந்த உடன்படிக்கை முன்னெடுத்துச் செல்லும்.

5

ஆஸ்திரியாவின் ஆஸ்திரிய சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு முகமைக்கும் (AGES) இந்தியாவின் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கும் (FSSAI) இடையே உணவுப் பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், உணவுப் பாதுகாப்புத் தரநிலைகள், அறிவியல் பரிமாற்றம், திறன் மேம்பாடு மற்றும் உணவு ஒழுங்குமுறை, இடர் மதிப்பீடு ஆகியவற்றில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும். அதன்மூலம், பாதுகாப்புத் தரநிலைகளுக்கு மிக உயர்ந்த முன்னுரிமையை உறுதிசெய்து, விவசாய மற்றும் உணவுப் பொருட்களின் வர்த்தகத்தை மேம்படுத்தும்.

6

இரட்டைத் தொழிற்பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் தொழிற்கல்வித் தகுதிகளை அங்கீகரித்தல் தொடர்பான கூட்டு உடன்படிக்கை

இரட்டைத் தொழிற்பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் பரிமாற்றங்களையும், அறிவுசார் பகிர்வையும் விரிவுபடுத்தவும், ஆஸ்திரிய தரநிலைகளின்படி இந்தியத் தொழிற்கல்வித் தகுதிகளுக்கான அங்கீகாரத்தை ஊக்குவிக்கவும் கூட்டு உடன்படிக்கை உதவும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2252562&reg=3&lang=1

----

TV/BR/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2322569) வருகையாளர் எண்ணிக்கை : 7