தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகள் குறித்து மத்திய அரசு விளக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
08 OCT 2026 9:19AM by PIB Chennai
இந்தியாவில், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகளுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பானது, பாகுபாடான முறையில் செயல்படுத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் செய்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகள் உட்பட, அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளுக்கும், நியாயமான, பாகுபாடற்ற அங்கீகாரக் கட்டமைப்பை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்தியாவில், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகளை வழங்குவதை சாத்தியமாக்கும் அரசின் உறுதியான நிலைப்பாட்டின் ஒரு பகுதியாக, புவி சுற்றுப்பாதை அல்லாத செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மூன்று சர்வதேச தனிநபர் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நடைமுறையின் ஒரு பகுதியாக, உரிமம் பெற்ற மூன்று நிறுவனங்கள் தொடர்பாகவும் பாதுகாப்பு மதிப்பீடு தற்போது நடைபெற்று வருகிறது. உரிமம் பெற்ற ஒரு நிறுவனத்திற்கான இந்தச் செயல்முறை நிறைவடைந்ததும், அலைக்கற்றை ஒதுக்கீடு கோரும் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். தற்போது, அந்த மூன்று நிறுவனங்களும் ஏறக்குறைய ஒரே ஒழுங்குமுறை நிலையிலேயே உள்ளன. எனவே, இந்தக் கட்டமைப்போ அல்லது அதன் செயல்பாடோ நியாயமற்றது அல்லது பாகுபாடானது என்ற கருத்து அடிப்படை ஆதாரமற்றது என்றும், தவறான புரிதலைக் கொண்டது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2320510®=3&lang=1
----
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2322222)
வருகையாளர் எண்ணிக்கை : 15