தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
2026 தூய்மையே சேவை இயக்கத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
08 OCT 2026 7:15PM by PIB Chennai
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், 2026 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை நடைபெற்ற 2026 தூய்மையே சேவை இயக்கத்தை தூய்மை இந்தியா தினத்தன்று வெற்றிகரமாக நிறைவு செய்தது. "தூய்மையில் அனைவரின் பங்களிப்பு; தூய்மையான இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கருப்பொருளில் மேற்கொள்ளப்பட்ட இந்த இயக்கம், தூய்மையான, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வை மற்றும் உறுதிமொழியை முன்னெடுத்துச் செல்வதில் ஒவ்வொரு தனிநபரின் கூட்டுப் பங்களிப்பையும் பொறுப்பையும் வலியுறுத்தியது.
தனது அனைத்து ஊடகப் பிரிவுகள், அவற்றின் கள அலுவலகங்களுடன் இணைந்து, அமைச்சகம் நாடு முழுவதும் 4,710 நிகழ்ச்சிகளை நடத்தியது. இதன் மூலம் 2,943 நிகழ்ச்சிகள் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கில் 160 சதவீதம் எட்டப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தில் 74,483 பேர் பங்கேற்றனர்.
மத்திய தகவல் ஒலிபரப்பு, ரயில்வே மற்றும் மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், தூய்மையே சேவை இயக்கத்தின் ஒரு பகுதியாக, மூன்று அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளுடன் அக்டோபர் 1 அன்று கலந்துரையாடினார்.
தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், தில்லியில் உள்ள இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தில் நடைபெற்ற "ஒரு நாள், ஒரு மணிநேரம், ஒன்றாக இணைந்து செயல்படுதல்" பிரச்சாரத்திலும் இதர நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, தூய்மைப் பணியை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2320939®=3&lang=1
***
TV/RB/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2322214)
வருகையாளர் எண்ணிக்கை : 12