இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு - வாரணாசியில் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 11 OCT 2026 1:37PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, வாரணாசியில் நடைபெற்ற 'ஃபிட் இந்தியா - சண்டேஸ் ஆன் சைக்கிள்' எனப்படும் உடல் திறன் இந்தியா ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்ச்சியின் 94-வது பதிப்பிற்கு இன்று (11.10.2026) தலைமை வகித்தார். போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள், ஆரோக்கியமான இந்தியா என்ற செய்தியை முன்னிறுத்தும் வகையில், இந்த நிகழ்ச்சி 500-க்கும் மேற்பட்ட மிதிவண்டி ஓட்டுநர்களையும் 1,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களையும் ஒன்றிணைத்தது.  இந்த நிகழ்வில், 2026 ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற பிராச்சி சௌத்ரி, பருல் சௌத்ரி, ஜெய் குமார், ராஜ் குமார் பால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வு காலை 6 மணிக்கு நமோ படித்துறையில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு மன்சுக் மாண்டவியா, இளைஞர்கள் உடற்பயிற்சியைத் தங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக ஆக்கிக்கொள்ளவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றவும் அழைப்பு விடுத்தார். போதைப்பொருள் இல்லாத சமூகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், அமைச்சரும் பங்கேற்பாளர்களும் போதைப்பொருள் இல்லாத இந்தியாவுக்கான உறுதிமொழியை ஏற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2321920&reg=48&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2321991) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Kannada