மாநிலங்களவைச் செயலகம்
தான்சானியாவில் நடைபெற்ற சர்வதேச நாடாளுமன்ற கூட்டமைப்பு மாநாட்டில், மாநிலங்களவை துணைத்தலைவர் திரு ஹரிவன்ஷ் தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழு பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
10 OCT 2026 1:10PM by PIB Chennai
மாநிலங்களவை துணைத்தலைவர் திரு ஹரிவன்ஷும் அவருடன் சென்ற இந்திய தூதுக்குழு உறுப்பினர்களும், சர்வதேச நாடாளுமன்ற கூட்டமைப்பின் கூட்டத்தில் கலந்துகொண்டனர். தான்சானியாவின் அருஷாவில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சர்வதேச நாடாளுமன்ற கூட்டமைப்பின் தலைவர் தேர்தல், சிறப்பு கூட்டங்களின் அறிக்கைகள் உள்ளிட்ட செயல்திட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
மாநிலங்களவையின் துணைத்தலைவர் திரு ஹரிவன்ஷ், மக்களவை உறுப்பினர் திரு அனுராக் சிங் தாக்கூர், மக்களவை உறுப்பினர் திருமதி கமல்ஜீத் செஹ்ராவத் ஆகியோர், சர்வதேச நாடாளுமன்ற கூட்டமைப்பின் தலைவர் தேர்தலில் இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்ட மூன்று வாக்குகளை அளித்தனர்.
ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் திரு மில்டன் டிக், அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட உடனேயே, திரு ஹரிவன்ஷும், இந்திய நாடாளுமன்றக் குழுவினரும் திரு மில்டன் டிக்கிற்கு நேரில் வாழ்த்துத் தெரிவித்தனர்.
திரு ஹரிவன்ஷ் தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழு, 2026 அக்டோபர் 5 முதல் 9 வரை தான்சானியாவின் அருஷாவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பங்கேற்றது. இக்குழுவின் பங்கேற்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.
மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2321679®=3&lang=1
(Release ID : 2321679)
****
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2321764)
வருகையாளர் எண்ணிக்கை : 14