இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மை பாரத் – என்எஸ்எஸ் இணைந்து நடத்திய போதைப் பொருள் தடுப்பு இயக்கம் : 1.06 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 10 OCT 2026 4:35PM by PIB Chennai

மை பாரத் திட்டம், நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவற்றின் மூலம் இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம், 'என் ஆரோக்கியம், என் பெருமை' என்ற கருப்பொருளின் கீழ் நடத்தும் 100 வார இயக்கத்தின் முதல் மாத நிறைவைக் குறிக்கும் வகையில், நேற்று (அக்டோபர் 9, 2026) நாடு தழுவிய இளைஞர் விழா வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

200 நிறுவனங்கள், அவற்றால் தத்தெடுக்கப்பட்ட கிராமங்களில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வுகளில், 1,06,855 பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர். இது இளைஞர்களையும் சமூக உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை வலுப்படுத்த உதவியது.

போதைப் பொருள் இல்லாத இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கி, இளைஞர்கள் தலைமையிலான விழிப்புணர்வு நடவடிக்கைகளை இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

மேலும் இவர்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2321739&reg=3&lang=1

(Release ID : 2321739)

****

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2321760) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Assamese , Telugu , Malayalam