பிரதமர் அலுவலகம்
மஹாளயா நன்னாளில் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
10 OCT 2026 9:30AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி மஹாளயா நன்னாளான இன்று (10.10.2026) மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சமுதாயத்தில் மகிழ்ச்சி, கருணை, நம்பிக்கை நிறைந்திருக்க அன்னை துர்காவின் ஆசீர்வாதங்களை வேண்டி பிரார்த்தனை செய்வதாகக் கூறியுள்ள திரு நரேந்திர மோடி, அனைவரும் அமைதியுடனும் செழிப்புடனும் வாழ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இனிய மஹாளயா நல்வாழ்த்துகள்!
நாம் துர்கா தேவியின் ஆசிகளை நாடுகிறோம். அவரது ஆசிகள் நமது சமுதாயத்தை மகிழ்ச்சி, கருணை, நம்பிக்கை ஆகியவற்றால் நிரப்பட்டும். எங்கும் அமைதியும் செழிப்பும் நிலவட்டும்."
(Release ID : 2321629)
****
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2321673)
வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam