பிரதமர் அலுவலகம்
முண்டியால் டூ குவிஜோ டூ பிரேசில் 2026-ல் மகத்தான சாதனையை நிகழ்த்திய இந்திய சீஸ் தயாரிப்பாளர்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
22 APR 2026 9:02PM by PIB Chennai
பாலாடைக்கட்டி மற்றும் பால் பொருட்களுக்கான துடிப்பான சர்வதேச போட்டியான முண்டியால் டூ குவிஜோ டூ பிரேசில் 2026-ல் சிறப்பான சாதனையை நிகழ்த்தியதற்காக இந்திய சீஸ் தயாரிப்பாளர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 1 சூப்பர் தங்கம், 2 தங்கம் மற்றும் 1 வெள்ளி உட்பட நான்கு இந்திய தயாரிப்புகள் பதக்கங்களை வென்றன.
"எலிஃபெரியா குல்மார்க் (ப்ரீ ஸ்டைல்) சூப்பர் தங்கத்தையும், யாக் சுர்பி-சாஃப்ட், நார்டிக் ஃபார்ம், லே, லடாக் மற்றும் எலிஃபெரியா ப்ரூனோஸ்ட் (வே சீஸ்) தங்கத்தையும், எலிஃபெரியா காளி மிரி (பெல்பர் நோல் ஸ்டைல்) வெள்ளியையும் வென்றன" என்று திரு மோடி கூறியுள்ளார்.
மவுசம் நாரங் மற்றும் தென்லே நூர்பூ உள்ளிட்ட விருது பெற்றவர்களின் முயற்சிகளைப் பாராட்டியுள்ள பிரதமர், இத்தகைய சாதனைகள் இந்தியாவின் பால் பண்ணை துறையில் வளர்ந்து வரும் உலகளாவிய அங்கீகாரத்தைப் பிரதிபலிப்பதாகக் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் கூறியுள்ளதாவது;
"இந்தியாவில் இருந்து வரும் பாலாடைக்கட்டி உலகளவில் தனது முத்திரையை பதித்துள்ளது.
சீஸ் மற்றும் பால் பொருட்களுக்கான துடிப்பான சர்வதேச போட்டியான முண்டியால் டூ குவிஜோ டூ பிரேசில் 2026-ல் , இந்தியா ஒரு அற்புதமான அறிமுகத்தை ஏற்படுத்தியது. 1 சூப்பர் தங்கம், 2 தங்கம் மற்றும் 1 வெள்ளி உட்பட நான்கு இந்திய தயாரிப்புகள் பதக்கங்களை வென்றன.
சூப்பர் தங்கத்தை எலிஃபெரியா குல்மார்க் (ப்ரீ ஸ்டைல்) வென்றது. தங்கத்தை யாக் சுர்பி-சாஃப்ட், நோர்டிக் ஃபார்ம், லே, லடாக் மற்றும் எலிஃபெரியா ப்ரூனோஸ்ட் (வே சீஸ்) வென்றன. வெள்ளியை எலிஃபெரியா காளி மிரி (பெல்பர் நோல் ஸ்டைல்) வென்றது. மவுசம் நாரங் மற்றும் தென்லே நூர்பூ ஆகியோருக்கு வாழ்த்துகள்.
இத்தகைய வெற்றிகள் உலக அரங்கில் இந்தியாவின் பால் பண்ணை துறையை வலுப்படுத்துகின்றன ".
***
(Release ID: 2254683)
TV/PKV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2321433)
வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam