நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அக்டோபரில் மின் நிலையங்களுக்கான நிலக்கரி விநியோகம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது: மத்திய நிலக்கரி அமைச்சகம் விளக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 09 OCT 2026 10:54AM by PIB Chennai

அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறைந்த அளவில் உள்ளதால், இந்தியாவில் மின்சாரப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் அதிகரித்து வருவதாக சில ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, நிலக்கரி அமைச்சகம் பின்வரும் விளக்கத்தை அளித்துள்ளது.  

எச்சரிக்கை அளவிலான கையிருப்பு வகைப்பாடு என்பது, என வகைப்படுத்தப்படுவது, நிர்ணயிக்கப்பட்ட அளவுகோலின்படி, விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிலக்கரி இருப்பு அளவைவிடக் குறைவாகக் கொண்டுள்ள மின் நிலையங்களைக் குறிக்கும். உண்மையான எரிபொருள் பற்றாக்குறை அல்லது மின் உற்பத்தி இழப்பு ஏற்படுவதற்கு முன்பே, மின் நிலையங்களில் நிலவும் நிலைமையை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை செய்வதற்காகவே இந்த வகைப்பாடு மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இந்தப் பட்டியலில் ஒரு மின் நிலையம் இடம்பெறுவதால், அங்கு நிலக்கரி இருப்பு முற்றிலும் தீர்ந்துவிட்டது என்றோ, அந்த மின் நிலையம் விரைவில் மூடப்படும் அபாயத்தில் உள்ளது என்றோ அர்த்தம் இல்லை. மின்சாரத் துறைக்கான தினசரி நிலக்கரி விநியோகம், செப்டம்பர் மாதத்தின் குறைந்தபட்ச அளவிலிருந்து சுமார் 36% உயர்ந்துள்ளதுடன், அக்டோபர் மாதத்தின் சராசரி, செப்டம்பர் மாதத்தை விட சுமார் 9% அதிகமாக உள்ளது.

நாட்டின் எந்தப் பகுதியிலும் நிலக்கரி இருப்பு பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, ரயில்வேத்துறை, மின்சார அமைச்சகங்களுடன் இணைந்து, மத்திய நிலக்கரி அமைச்சகம், தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2321166&reg=3&lang=1

***

SS/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2321275) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: Bengali , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Punjabi , Telugu