பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் மாரத்தான் போட்டியில், வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் சாவன் பர்வாலுக்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 26 SEP 2026 11:45PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் மாரத்தான் போட்டியில், வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் சாவன் பர்வாலுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டியில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா பதக்கம் வெற்றிபெறாத நிலையில், தற்போது பதக்கம் வென்றதுடன், புதிய தேசிய சாதனையையும் சாவன் பர்வால் படைத்துள்ளார் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியாவுக்கு வெளியே, ஆசிய விளையாட்டு மாரத்தான் போட்டியில், இந்தியா வென்ற முதல் பதக்கம் இது என்பதால், இந்தச் சாதனை மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அவரது பொறுமையும், மன உறுதியும், நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், கூறியிருப்பதாவது:

"ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் மாரத்தான் பிரிவில், வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கம் வென்ற சாவன் பர்வாலுக்கு வாழ்த்துகள். புதிய தேசிய சாதனையுடன், 40 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தப் பிரிவில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும். அத்துடன், இந்தியாவிற்கு வெளியே, ஆசிய விளையாட்டு மாரத்தான் போட்டியில், இந்தியா வென்ற முதல் பதக்கம் என்பதால், இந்தச் சாதனை மிகவும் சிறப்பானது. அவரது பொறுமையும், மன உறுதியும், நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளன. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு  நல்வாழ்த்துகள்: பிரதமர்".

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315463&reg=3&lang=1   

-----

TV/SV/GS     


(வெளியீட்டு அடையாள எண்: 2319528) வருகையாளர் எண்ணிக்கை : 24