உள்துறை அமைச்சகம்
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் திரு அசோக் சிங்காலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் தொடக்க விழாவில், மத்திய அமைச்சர் திரு அமித் ஷா பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
27 SEP 2026 7:40PM by PIB Chennai
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் திரு அசோக் சிங்காலின் பிறந்தநாளை முன்னிட்டு புதுதில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் தொடக்க நிகழ்ச்சியில், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்.
திரு அசோக் தனது போராட்ட குணத்திற்காகவே அனைவராலும் போற்றப்படுவதாக திரு அமித் ஷா கூறினார். ராம ஜென்மபூமி இயக்கம் அவரது இதயத்திலும் மனதிலும் ஆழமாகப் பதிந்திருந்தது. அடிமைத்தனத்தின் களங்கத்தை நீக்கி, பிரம்மாண்டமான ராமர் கோயிலைக் கட்டுவதன் மூலமே இந்தியா உலகில் கண்ணியம், பெருமைமிக்க நிலையை அடைய முடியும் என்று அவர் உறுதியாக நம்பினார். ராம ஜென்மபூமி இயக்கத்திற்காகவே அவர் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார் என்று அமித் ஷா குறிப்பிட்டார். ராமர் கோயில் கட்டுமானம், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு ஒரு புதிய பாதையை வகுக்கும் என்ற திரு அசோக்-ன் நம்பிக்கையைத் தானும் பகிர்ந்துகொள்வதாக திரு அமித் ஷா கூறினார். நமது சிந்தனைகள், கலாச்சாரம், தர்மம், அதன் நற்பண்புகள் ஆகியவை உலகம் முழுவதும் உள்ள மக்களைச் சென்றடையும் என்று அவர் குறிப்பிட்டார். நாட்டின் இளைஞர்கள் திரு அசோக்-ன் ஆளுமை, வாழ்க்கை, பங்களிப்புகள் மற்றும் வார்த்தைகளிலிருந்து தொடர்ந்து நற்பண்புகளையும் உத்வேகத்தையும் பெறுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315631®=3&lang=1
***
TV/BR/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2319499)
வருகையாளர் எண்ணிக்கை : 32