பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடற்படை ஆதரவுக் கப்பல் கட்டுமானத்தை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் விசாகப்பட்டினத்தில் தொடங்கி வைக்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 05 OCT 2026 4:10PM by PIB Chennai

நாட்டின் உள்நாட்டு கப்பல் கட்டும் திறனை வெளிப்படுத்தும் வகையில், விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில், பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2026 அக்டோபர் 6 அன்று கடற்படை ஆதரவு கப்பல்–1–ஐ தொடங்கி வைக்கிறார். அத்துடன் கடற்படை ஆதரவு கப்பல்–5 கப்பலுக்கான அடித்தளக் கட்டமைப்பு அமைக்கும் பணியை தொடங்கி வைக்கிறார். மேலும் மேம்படுத்தப்பட்ட ஸ்லிப்வே–4, 300 டன் எடையிலான கோலியத் க்ரேன் ஆகியவற்றையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார்.

நீட்டிக்கப்பட்ட நீளத்துடனும் மேம்படுத்தப்பட்ட எடை தாங்கும் திறனும் கொண்ட ஸ்லிப்வே–4, அதனுடன் இணைந்த 300 டன் கோலியாத் க்ரேன் ஆகியவை 45 ஆயிரம் டன் வரையிலான கப்பல்களை கட்டுவதற்கு உதவும். இதனால் பெரிய, சிக்கலான கப்பல் கட்டமைப்புகளை உருவாக்கும் திறன் பெருமளவு விரிவடையும்.

இந்திய கடற்படைக்காக கட்டப்படும் 5 கடற்படை ஆதரவு கப்பல் வகைகள் 43,500 டன் கொண்டதாகும். இவை கடலில் உள்ள போர்க்கப்பல்களுக்கு தேவையான எரிபொருட்களையும் அளிக்கும். இதன்மூலம் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் கடற்படையின் செயல்பாட்டுத் திறனும், நீண்டதூரம் பயணிக்கும் திறனும் அதிகரிக்கும்.

இந்நிகழ்ச்சியில் ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு, கடற்படைத் தளபதி அட்மிரல் கிருஷ்ணசுவாமிநாதன், பாதுகாப்புத் தளவாட உற்பத்தித்துறை செயலார் திரு சஞ்சீவ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319156&reg=3&lang=1

***

TV/IR/LDN/SH 

 


(வெளியீட்டு அடையாள எண்: 2319344) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Telugu