சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜெய்சல்மரில் இரண்டு ஆண் கானமயில்களை வனப்பகுதியில் விடுவித்தார் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ்

இடுகை இடப்பட்ட நாள்: 04 OCT 2026 11:33AM by PIB Chennai

மிகவும் அருகிவரும் இனமான கானமயில் பறவையைப் பாதுகாப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மத்திய சுற்றுச்சூழல், துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் உள்ள பாலைவன தேசியப் பூங்காவின் சாம் என்ற இடத்தில் இரண்டு ஆண் கானமயில் பறவைகளைக் காட்டில் விடுவித்தார். இந்நிகழ்வில், ராஜஸ்தான் மாநில வனத் துறை அமைச்சர் திரு சஞ்சய் சர்மா, மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு பூபேந்தர் யாதவ் வெளியிட்டுள்ள பதிவில், கானமயிலையும் பிற உயிரினங்களையும் பாதுகாப்பதற்காக, பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கிவரும் தொடர்ச்சியான வழிகாட்டுதல், ஊக்கம், ஆதரவு ஆகியவற்றுக்காக நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

ராஜஸ்தானின் பாலைவனங்களில் கானமயில்களை மீண்டும் விட, நமது விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், களப்பணியாளர்கள் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக காலமாக காட்டிய தளராத அர்ப்பணிப்பின் விளைவே இந்த மைல்கல் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கானமயில் பாதுகாப்புத் திட்டத்தில், இந்த விடுவிப்பு முக்கியமானது எனவும் இதிலிருந்து பெறப்படும் படிப்பினைகள், அடுத்தடுத்த கானமயில் பாதுகாப்பிற்கான நெறிமுறைகளைப் படிப்படியாகச் செம்மைப்படுத்தப் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2318842&reg=3&lang=1

***

TV/PLM/RJ   


(வெளியீட்டு அடையாள எண்: 2319143) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Malayalam