ஜவுளித்துறை அமைச்சகம்
ஜவுளி அமைச்சகம் சார்பாக தேதி ஹைராபாத்தில் ‘சீர்திருத்தத் திருவிழா 2026’-ன் ஒரு பகுதியாக சிறப்புக் கண்காட்சி நடைபெறவுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
04 OCT 2026 7:01PM by PIB Chennai
மத்திய ஜவுளி அமைச்சகம், தனது பொதுத்துறை நிறுவனமான இந்தியப் பருத்திக் கழகம் மூலம், 'சீர்திருத்தத் திருவிழா 2026’-ன் ஒரு பகுதியாக, தெலங்கானாவின் ஹைதராபாத்தில் 2026 அக்டோபர் 6 அன்று ஒரு சிறப்புக் கண்காட்சியை நடத்தவுள்ளது. பருத்தி கொள்முதல் நடைமுறைகளை விவசாயிகளை மையமாகக் கொண்டதாகவும், வெளிப்படையானதாகவும், தொழில்நுட்பம் சார்ந்ததாகவும், திறமையானதாகவும் மாற்றுவதற்காக, ஜவுளி அமைச்சகத்துடன் இணைந்து இந்தியப் பருத்திக் கழகம் மேற்கொண்ட சீர்திருத்தங்களை இந்த நிகழ்வு காட்சிப்படுத்தும்.
இந்த விழா, பருத்தி மற்றும் ஜவுளித் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், தெலங்கானா மாநில அரசுப் பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள், விவசாயிகள், தொழில் சங்கங்கள் மற்றும் இதர பங்குதாரர்களை ஒன்றிணைக்கும். இது, சீர்திருத்தங்களால் கள அளவில் ஏற்பட்டுள்ள தாக்கங்களை முன்னிலைப்படுத்தவும், பருத்தி மதிப்புச் சங்கிலியில் உள்ள முக்கிய பங்குதாரர்களிடையே அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் ஒரு தளத்தை உருவாக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2318919®=3&lang=1
***
TV/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2319130)
வருகையாளர் எண்ணிக்கை : 5