அணுசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வைர விழாவை கொண்டாடிய யுரேனியம் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா

இடுகை இடப்பட்ட நாள்: 05 OCT 2026 8:31AM by PIB Chennai

மத்திய அணுசக்தி துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான யுரேனியம் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியாவின் வைர விழா ஜடுகுடா பகுதியில் உள்ள யுரேனியம் சுரங்க மையத்தில் நடைபெற்றது. இந்நிறுவனம் அணுசக்தி திட்டங்களுக்கு கடந்த 60 ஆண்டுகளாக சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது. 1967 அக்டோபர் 4 அன்று தொடங்கப்பட்ட யுரேனியம் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் வைர விழாவுக்கு அணுசக்தி ஆணையத்தின் நிதி உறுப்பினர் திருமிகு சீமா ஜெயின் தலைமை வகித்தார். அணுசக்தி துறை அதிகாரிகள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஊடகவியலாளர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இவ்விழாவையொட்டி, பத்திரிகையாளர்கள் வரவழைக்கப்பட்டு, யுரேனியம் சுரங்க செயல்பாடுகள் குறித்து நேரில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், அணுசக்தி தொடர்பான சிறப்பு தொழில்நுட்ப கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 60 ஆண்டுகாலமாக இந்தியாவின் அணுசக்தி தொடர்பான திட்டங்களின் வளர்ச்சிக்கு  யுரேனியம் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா நிறுவனம் உறுதுணையாக இருந்து வருவதாகவும், இதன்மூலம் எதிர்காலத்தில் இந்தியாவின் அணுசக்தி துறை அடுத்தகட்டத்திற்கு முன்னேறி செல்லும் எனவும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர். தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு அம்சங்களில் இந்நிறுவனம் மேம்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2318970&reg=3&lang=1

***

SS/LN/RJ 


(வெளியீட்டு அடையாள எண்: 2319115) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Telugu