ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மை இந்தியா தினம் குஜராத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டத்துக்கு மத்திய அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல் தலைமை வகித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 03 OCT 2026 2:32PM by PIB Chennai

தூய்மை இந்தியா தினத்தையொட்டி, குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டம் சிக்லி வட்டாரத்தின் மஜிகாம் கிராமத்தில் நேற்று (2026 அக்டோபர் 2) நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் பங்கேற்றார். குஜராத் அமைச்சர்கள், மாநில, மாவட்ட உயர் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

தூய்மைப் பணியாளர்களை கௌரவித்த அமைச்சர், தூய்மை என்பது ஒருநாள் இயக்கமாக இல்லாமல், அன்றாட வாழ்வின் பழக்கமாகவும், கூட்டுப் பொறுப்பாகவும் அமைய வேண்டும் என்றார். "நாம் குப்பை போடக்கூடாது; பிறரையும் போட அனுமதிக்கக்கூடாது” என உறுதியேற்குமாறு வலியுறுத்தினார்.

மகாத்மா காந்தி தேச விடுதலையுடன் தூய்மைக்கும் முக்கியத்துவம் அளித்ததை நினைவுகூர்ந்த அவர், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தூய்மை இந்தியா இயக்கம் மூலம் கிராமப்புற சுகாதாரத்தில் ஏற்பட்ட மாற்றத்தை எடுத்துரைத்தார்.

சிறப்பு கிராம சபையில் தூய்மை மதிப்பீடு, திடக்கழிவு மேலாண்மை விதிகள், தூய்மை இயக்கத்தின் சாதனைகள், நான்கு வகைக் கழிவுகள் பிரிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

தேவையற்ற பொருள்களை கலைப் பொருள்களாக மாற்றப்பட்டு நடத்தப்பட்ட கண்காட்சியை அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல் பார்வையிடப்பட்டதுடன், அன்னையின் பெயரில் மரக்கன்று நடும் இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகளை நட்டார்.

 ஜார்க்கண்ட், ஹரியானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைகக் கூட்டங்களில் ஜல்சக்தி அமைச்சக உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2318610&reg=48&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2318697) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Odia , Telugu , Kannada